புதுச்சேரி அருகே சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி உட்பட இருவர் கைது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக் கோப்பை பதவி சேர்ந்தவர் ஷாஜகான் (25). இவர் மீது கொலை,கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று மதியம் ஷாஜகான் தனது ஷெரிப் என்பவருடன் கோட்டகுப்பம் கறிக்கடை சந்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதாக கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
அதன் பேரில் கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாஜகானை விசாரித்தனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த ஷாஜகான் சப்- இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments